MAHKAMAH TINGGI KL TOLAK PERMOHONAN SPR
>> 23 November 2009
கோத்தா சிபுத்தே மீதான தீர்ப்பை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு
கெடா கோத்தா சிபுத்தே சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தனது முந்திய முடிவை நிறுத்தி வைப்பதற்கு அந்த ஆணையம் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளைப் பரிசீலிப்பதற்கு சிறப்பு சூழ்நிலைகள் ஏதும் இல்லை என்று நீதிபதி அலிஸாத்துல் கைர் ஒஸ்மான் கைருடின் கூறினார்.
“மேலும் இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதால் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்கு உத்தரவை வழங்க முடியாது”, என்று அவர் சொன்னார்.
கோத்தா சிபுத்தே தொகுதிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் இன்று சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறிய பின்னர் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்காததின் மூலம் தவறு செய்திருப்பதாக அகடந்த வாரம் அவர் தீர்ப்பளித்திருந்தார்.
அடுத்த 60 நாட்களுக்குள் இடைத் தேர்தலை நடத்துமாறும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
தேர்தல் ஆணையம் இன்றைய உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்து கொள்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கு விண்ணப்பித்துக் கொண்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய்வதற்காக இன்று பிற்பகல் தேர்தல் ஆணையம் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. அதே வேளையில் அந்த முடிவுக்கு எதிராக முறையீட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
0 ulasan:
Catat Ulasan