KETUA UMNO PJ SELATAN MASUK PAS
>> 24 Disember 2008
ரிம 1.6 பில்லியன் ஈரோகொப்டர் கொள்முதல் திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சுமத்திய அம்னோ பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதி முன்னாள் தலைவர் அபு ஜகார் ஹஷிம் இன்று பாஸ் கட்சியில் சேர்ந்தார்.
கோலாலம்பூர் அம்பாங்கில் உள்ள ஒரு தங்குவிடுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அந்தப் பணி ஓய்வுபெற்ற ராணுவ கெப்டன், தம் மனுவை பாஸ் உதவித்தலைவர் நசருடின் மாட் ஈசாவிடம் வழங்கினார்.
இம்மாதத் தொடக்கத்தில், பிரதமர் அப்துல்லா அகமட் படாவி மற்றும் துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்பட அம்னோ தலைமைத்துவத்தைக் குறைகூறியதற்காக அபு ஜகார் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அம்னோ தொகுதிக் கூட்டமொன்றில் இரு உயர்த் தலைவர்களும் தங்கள் அதிகாரத்தை மீறி நடந்துகொள்வதாக, அவர் குற்றம் சாட்டினார்.
அம்னோ தொகுதிக் கூட்டமொன்றில் இரு உயர்த் தலைவர்களும் தங்கள் அதிகாரத்தை மீறி நடந்துகொள்வதாக, அவர் குற்றம் சாட்டினார்.
இன்றைய நிகழ்வில் பேசிய அபு ஜகார், 28 அம்னோ கிளைத் தலைவர்களும் 13 தொகுதி செயலவை உறுப்பினர்களும் பாஸில் சேர்வார்கள் எனக் கூறினார்.(malaysiaindru.com)
0 ulasan:
Catat Ulasan