RAFIDAH vs SHAHRIZAT
>> 24 November 2008
பெண் அடக்கத்தின் உருவம், ஆத்திரம் கொண்டால் அதுவே ஆவேசப் புயல். அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ரபிடா அப்துல் அஜீஸ், சொந்தக் கையெழுத்தில், முக்கிய செய்திகளைக் கொட்டை எழுத்துகளிலும் அடிக்கோடிட்டும், வெளியிட்ட 10-பக்க அறிக்கையில் அந்த ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் காண முடிந்தது.
மொத்தத்தில் அந்த அறிக்கையில், எட்டாண்டாண்டுக் காலமாக மகளிர் பிரிவில் தமக்குத் துணையாக இருந்த ஷாரிசாட் அப்துல் ஜாலிலை ஒரு துரோகி என்ற சொல்லாமல் சொல்லியிருந்தார் அந்த 65-வயது அரசியல்வாதி.
ஷாரிசாட்டைக் கட்சியின் தேர்தல் களத்தில் சந்திப்பதற்கு தயாராகிவிட்ட ரபிடா, முதலில் அதிகார மாற்றத் திட்டத்துக்கு ஒத்துக்கொண்ட அவர் பின்னர் பல்டி அடித்தது ஏமாற்றம் தருவதாகக் கூறினார்.
“அதிட்டம் அறிவிக்கப்பட்டபோது செயலவையிலோ வெளியிலோ யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.”
“ஷாரிசாட்டே, நியமனம் செய்யப்பட்டால்கூட போட்டியிடப் போவதில்லை என்று தனிப்பட்ட கூட்டங்களிலும், செயலவையிலும் ஊடகங்களிலும் கூறிவந்துள்ளார்”, என்று ரபிடா கூறினார்.
முதலில் அதிகார மாற்றத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்ட ஷாரிசாட், தம்மைத் தலைவிப் பதவிக்கு 77 தொகுதிகள் நியமனம் செய்ததை அடுத்து மனம் மாறினார்.
தலைவிப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அவர் வியாழக்கிழமை அறிவித்தார்.
இப்போது அதிகார மாற்றத் திட்டம் கைவிடப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள ரபிடா, முன்பே அத்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தால் செயலவை அதனை ரத்து செய்திருக்குமே என்றார்.
இப்போது அத்திட்டத்தை எதிர்ப்பதற்கு, போதுமான நியமனங்கள் கிடைத்திருப்பதாக தேவையற்ற காரணங்களெல்லாம் கூறப்படுகின்றன என்றாரவர்.
அதிகார மாற்றத் திட்டத்தை முன்கூட்டியே மார்ச் மாதத்திலேயே செய்யலாமே என்றதற்கு, இதனால் ஷாரிசாட், போட்டியின்றி மகளிர் பிரிவுத் தலைவி ஆகிவிடுவார் என்று ரபிடா பதிலளித்தார்.
“இது என் உரிமையையும் தலைவிப் பதவிக்கு என்னை நியமனம் செய்துள்ள 117 தொகுதிகளின் விருப்பத்தையும் மறுப்பதாக அமையும்”, என்று ரபிடா கூறினார். ஷாரிசாட்டின் முடிவை அம்னோ மகளிர் பிரிவின் பல தலைவிகள் வரவேற்பதாக பெர்னாமா கூறியது. 2000 ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பதவிக்குப் போட்டி இருந்ததில்லை.
“வெளிப்பார்வைக்குப் பல அம்னோ தொகுதித் தலைவிகள் ரபிடாவை ஆதரிப்பதுபோல் தெரியும். ஆனால் உள்ளுக்குள் 80 விழுக்காட்டுக்குமேல் ஆதரவு ஷாரிசாட்டுக்குத்தான்”, என்று செனட்டர் ஷரிபா அசிசா சைட் சயின் கூறினார்.
வேறு பலர் , கட்சியில் ஒரு மோதலைத் தவிர்க்க ரபிடா மார்ச் மாதத்திலேயே பதவி விலகலாம் என்றனர்.

0 ulasan:
Catat Ulasan